ஏழைகளின் பழி தீர்த்த வள்ளலாம் - நம் காமராசர்
பசிக்கு உணவு எனும் சத்துணுவுத் திட்டத்தால்
பசியுடன் இருக்கும் ஏழை மாணவருக்கு
ஓர் புத்துணர்வை தந்தார் நம் கல்வி தந்தை.
சத்துணவுக்காய் பாடசாலை வந்த - ஏழை
பள்ளி மாணவர்க்கு தந்தார்,
இலவச சீருடை, புத்தகமும், கல்வியும்,
தந்தார் இலவச சீருடையும் புத்தகமும் கல்வியும்
ஏழை மாணவருக்கு கல்வி என்னும் தீபம் எரிய
காரணமாயிற்று அவர் தந்த - இலவசத் திட்டங்கள்
கொழுந்து விட்டு எரிந்தன மாணவர்களின் கல்வி
அதனாலே உயர்ந்தது விருதை மாவட்ட கல்வி
கல்வியின் தந்தையாம் காமராசர் - அரசியலில்
பெருந்தலைவராக இருந்தும் தனக்காக எதையும் சேர்க்கவில்லை
மக்கள் அன்பை மட்டும் சேர்த்துக்கொண்டார் - நம் காமராசர்
என்றென்றும் மக்களுக்காக இறுதிவரை வாழ்ந்த தலைவரே
இனி உம்மை போல் ஒருவர் - இவ்வுலகில் பிறப்பரோ?????
இ.இனியவன்
0 Comments