கவிதை போட்டிக்கு - ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையா??

  


       இயக்குனர் லிங்குசாமி, நடிகர் சிவக்குமாருடன் இணைந்து, கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில், 1 லட்சம் ரூபாய் பரிசு உடைய, ஹைக்கூ கவிதை போட்டியை அறிவித்துள்ளார்கள்.

    லிங்குசாமி அவர்கள் கூறுகையில்  " என் வாழ்வில் இந்த போட்டியை முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். அப்துல் ர‌குமான் மீது நான் கொண்ட பற்று மற்றும் ஹைக்கூ கவிதை மேல் கொண்ட காதலே, இந்த போட்டிக்கு காரணம்," என்றார் 

கலந்துகொள்ள விதிமுறைகள்:

1. இதில் வயது வித்தியாசமின்றி யாரும் பங்கேற்கலாம். 

2. ஒருவர் மூன்று வரிகள் உடைய, இரண்டு கவிதைகள் மட்டுமே அனுப்ப வேண்டும்;

3 கருப்பொருள் எதைப்பற்றியும் இருக்கலாம்

 கவிதைகளை kavikohaikupotti@gmail.com, என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Post a Comment

0 Comments