உள்ளாடை அணிவதில் ஆண்கள் செய்யும் தவறுகள்..! இதை சரி செய்யாவிட்டால் என்ன ஆபத்து வரும் தெரியுமா..?

  உள்ளாடை அணிவதில் ஆண்கள் செய்யும் தவறுகள்..! இதை சரி செய்யாவிட்டால் என்ன ஆபத்து வரும் தெரியுமா..?

   என்ன பிராண்ட் வாங்கலாம் என பார்த்து பார்த்து வாங்கும் ஆண்கள் அதன் நிறம் , துணி வகை என்ன, அதன் வடிவமைப்பு , சௌகரியம் போன்ற விஷயங்களை மறந்துவிடுகின்றனர்.
    பொதுவாக ஆண்கள் உள்ளாடை வாங்கும்போது பார்க்கும் விஷயம் பிராண்ட் மட்டும்தான். ஆனால் அதன் நிறம் , துணி வகை என்ன, அதன் வடிவமைப்பு போன்ற விஷயங்களை மறந்துவிடுகின்றனர். அப்படி நீங்கள் செய்யும் தவறுகள் என்ன?. அதனால் நீங்கள் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்புகளை சந்திக்கலாம் என்று பார்க்கலாம்.

இறுக்கமான உள்ளாடை :

   உள்ளாடை வாங்கும்போது இறுக்கமான காற்றே புகாத அளவிற்கு வாங்காதீர்கள். இதனால் பொதுவெளியில் அதிகம் சிரம்மப்படுவது நீங்கள்தான். அந்தரங்க பகுதிக்கு போதுமான காற்றோட்டம் இருப்பது அவசியம். இல்லையெனில் அரிப்பு, எரிச்சல் உண்டாகும். இதனால் அந்த இடத்தில் சிரங்கு காயங்கள் உண்டாகலாம். அது தொற்றை ஏற்படுத்தலாம். அதேசமயம் அதிக லூசாகவும் வாங்காதீர்கள்.

    துணி வகைகளில் கவனம் அவசியம் :

   அடுத்ததாக நீங்கள் கவனிக்க வேண்டியது துணி வகைதான். சிந்தடிக் துணிகளில் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகள் காற்றை உள்ளிழுக்காது. அவை வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை தேக்கி வைக்கின்றன. இது தோல் எரிச்சலுக்கு வழிவகுக்கும் மற்றும் துர்நாற்றம் வீசக்கூடிய பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் உருவாக வாய்ப்புகள் அதிகம். எனவே ஃபைபர் துணி , காட்டன் துணிகளை தேர்வு செய்யுங்கள்.

ஆடைக்கு ஏற்ற உள்ளாடையை தேர்வு செய்யுங்கள் :

        பலரும் செய்யும் தவறு இதுதான். நீங்கள் செய்யும் வேலை, அணியும் உடைக்கு ஏற்பதான் உள்ளாடையும் அணிய வேண்டும். உதாரணமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் அல்லது அதிக ஆக்டிவானவர் எனில் நீங்கள் லைக்ரா, ஸ்பாண்டெக்ஸ் போன்ற துணி வகை கொண்ட ஃபிட்டட் உள்ளாடை அணிய வேண்டும். பொதுவான தேர்வு எனில் ஸ்லிம் ஃபிட் டிரவுசர், பிரீஃப்ஸ், டிரன்க்ஸ் மற்றும் பாக்சர் பிரீஃப்ஸ் போன்றவை வாங்கலாம். சட்டையை டக் இன் செய்யும் பழக்கம் இருந்தால் அணிந்து பார்த்து, நடந்து, அமர்ந்து பார்த்து வாங்க வேண்டும்.


வியர்வையுடன் உள்ளாடை அணியக்கூடாது :

        ஒர்க் அவுட் செய்து முடித்ததும் அல்லது ஏதேனும் அதிக வேலை செய்து அதிக வியர்வை வெளியேறியது எனில் அப்போது உள்ளாடையும் நனைந்திருக்கக் கூடும். அப்படி நனைந்திருந்தால் சோம்பேறித்தனம் படாமல் உடனே மாற்றிவிடுவது நல்லது. இல்லையெபில் வியர்வை பூஞ்சைகளை உருவாக்கி அந்தரங்கப்பகுதியில் தொற்றை உருவாக்கும்.

ஒரே உள்ளாடை பல மாதங்கள் பயன்படுத்துதல் :

  உள்ளாடைகள் வெளியே யாருக்கும் தெரியப்போவதில்லை என்றாலும் உங்களுக்கு அதன் நிலைமை நன்கு தெரியும். கிழிந்த மாதக்கணக்கில் பயன்படுத்தப்படும் உள்ளாடைகள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்யலாம். அதிக விலை கொடுத்து, ஸ்டைலிஷாக உடை அணிந்தாலும் உள்ளாடை சரியில்லையெனில் அந்த தோற்றம் முழுமையாக இருக்காது. இது அந்தரங்கப் பகுதியில் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். எனவே உள்ளாடைகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையேனும் மாற்றுவது அவசியம்.

கறைகளில் அக்கறை செலுத்துவதில்லை :

    உள்ளாடைகளை துவைக்கும்போது அதில் இருக்கும் கறைகள் நீங்கும் வரை துவைத்து சுத்தம் செய்யுங்கள். கறை படிந்த சட்டை , பேண்டை நீங்கள் பொதுவெளியில் அணிய மாட்டீர்கள் எனில் உள்ளாடை விஷயத்திலும் அதே ஃபார்முலாவை கடைபிடிப்பது அவசியம். இது மற்றவர்களுக்கு தெரியாது என்பதால் மறைக்க நினைக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது உங்களுக்கே தெரியாமல் நிகழலாம்.

Post a Comment

0 Comments