தோல் மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் வேம்பு!

தோல் மற்றும் முடி கொட்டுதல் பிரச்சனைக்கு தீர்வு தரும் வேம்பு! 


            நாம் தொலைத்து / மறந்து போன பாரம்பரிய  பழக்க வழக்கமும் மற்றும்  பாரம்பரிய மருத்துவம் மகத்துவம்.

            சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் நம் நாட்டின் பாரம்பரியமான மரம், செடி, கொடிகளை கொண்டே பல மருத்துவ பொருட்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். “வேப்ப எண்ணெய்” வேப்ப மரத்திலிருந்து தயாரிக்கப்படும் மகத்துவங்கள் நிறைந்த எண்ணெய் ஆகும்.

          வேப்ப எண்ணையில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.

    காயங்கள், தழும்புகள் உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது.

            மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை உடலுக்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்று நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது.

    தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இக்குறைபாட்டை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம்.

    தலைமுடி ஆரோக்கியத்திற்கு,வேப்ப இலையில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மிகவும் பயனுடையதாக உள்ளன. முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேப்பம் சரியான சிகிச்சை அளிக்க கூடியது ஆகும். தலைமுடி சரும பிரச்சனைகளால், முடி வேரிலும் பாதிப்பு அடையும். வேப்ப நீர் உபயோகித்து தலை அலசுவதினால்,சுத்தம் ஆகும். முடி வளர்ச்சிக்கும் வேப்பம் பயன்படும்.

    வேப்ப எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவதனால், தலைப் பகுதியில் உள்ள இரத்த ஓட்டம் சீராக அமைந்து முடி வளர்ச்சிக்கும் உதவியாக அமையும். வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலீவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தினால், இன்னும் ஆரோக்கியமானது.வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

    மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையல் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொடுகு, தலையில் இருக்கும் பிசுப்பிசுப்பான எண்ணெய் தேகத்தில் இருக்கும். பொடுகு பிரச்சனைகளால் அரிப்பு ஏற்படும்.   

    வேப்ப எண்ணெய் உபயோகித்து,பொடுகுப் பிரச்சனையை போக்கலாம். தேங்காய் எண்ணெயுடன் வேப்ப இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், சில எலுமிச்சை சாறு துளிகள் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை தலைமுடியில் தேய்த்து, இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். 

   இன்னொரு முறையாக, வேப்ப பொடி மற்றும் இலை சேர்த்த கலவையை பயன்படுத்தி வந்தால், பொடுகு நீங்கும்.

 பெடிகுலோசிஸ் காப்பிடிஸ் என அழைக்கப்படும் பேன், மனித தலைமுடிகளில் எளிதாக ஊடுறுவக் கூடியவை. பேன் தொல்லையில் இருந்து விடுபெற வேப்ப எண்ணெய் பெரிதும் உதவியாய் இருக்கும். 

    வேப்ப எண்ணெயில் இருக்கும் அசாடிராக்டின் எனப்படும் மூலப்பொருள் பூச்சிகளை நீக்கும் குணம் கொண்டவை.

   வேப்ப எண்ணெய்யை தலையில் தேய்த்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் கழுவ வேண்டும். இந்தியா மட்டும் இன்றி, உலகில் பல்வேறு நாடுகளில் வேப்ப மரத்தின் பயன்களை தெரிந்து வருகின்றன. எனவே, வேப்பத்தின் ஆரோக்கியத்தை பெற்று பயனடையவும்.

 வேப்பயிலை பாரம்பரிய பாரம்பரியமாக உபயோகித்து வரும் மூலிகையாகும். இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. இது சரும அழகு, கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

Post a Comment

0 Comments