வடமாநில இளைஞருடன் ஓர் உரையாடல்




 டைல்ஸ் ஒட்டுற ஜார்கண்ட் பையங்கிட்ட நடந்த உரையாடல்

தமிழ்நாட்டு காரர் :

ஏன்டா தம்பி டெய்லி எவ்ளோ சம்பளம்?

ஜார்கண்ட் இளைஞர் :

மூனுவேளை சோறு போட்டு 700 ரூபா குடுப்பாங்க சார். என்னோட செலவு போவ 15 ஆயிரத்த வீட்டுக்கு அனுப்பிருவேன். எங்க குடும்பமே இப்ப சந்தோசமா இருக்காங்க சார்!!


தமிழ்நாட்டு காரர் :

சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?"

ஜார்கண்ட் இளைஞர் :

120 ரூபா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார்.
டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்.


தமிழ்நாட்டு காரர் :

சரிடா தம்பி. இந்தி கத்துருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ.. இந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?

ஜார்கண்ட் இளைஞர் :

சார்.....எனக்கு வயசு 24. இதுவரை 6 ஸ்டேட்ல வேலை செஞ்சுருக்கேன். தமிழ்நாடு மாதிரி எங்கயுமே நிம்மதியா இருக்க முடியாது சார்!


தமிழ்நாட்டு காரர் :

அப்ப நாங்க இந்தி கத்துக்கிட்டா, வடநாட்டுல நல்ல எதிர்காலம் இருக்கா? இல்லையா?


ஜார்கண்ட் இளைஞர் :

சோத்துக்கே சிங்கி அடிக்கணும் சார்..😄


"எப்பயுமே இருக்க இக்கறைக்கு அக்கறை பச்சை தான். நம்ம நமக்கு என்ன தேவையோ அத சரி வர செஞ்சாலே போதும் . நல்ல படிய நம்மனால வாழ முடியும்"

Post a Comment

0 Comments