கொடுக்கக் கொடுக்க கொடுத்துக் கொண்டே இருக்கச் சொல்லும்
கடுகளவும் சுயநலம் அற்ற தன்மை உடையவன்
மனிதருள் மாணிக்கம் அவனே வள்ளல் !.......
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என
இத் தத்துவம் அறிந்து தளம்பாமல் இருப்பவனே சான்றோன்!!.....
வென்றால் பெருமை தோற்றால் வேதனை
அன்றும் இன்றும் என்றுமே தட்டிக்கொடுத்து வாழ வைப்பவன் நண்பன்!...
அற்ப சுகத்தைத் துறந்து பிறர் அகம் மகிழ வாழ்ந்து
நற்பணியே கெதியென நானிலம் போற்ற வாழ்பவன் ஞானி !...
அஞ்சாது மனம் கோணாது கண்மூடி திறக்கும் முன்னே
தன்னைத் தந்தும் பிற உயிர்காகப் பிறந்தவ(ள்)ன் தியாகி !!!!....
பண்போடும் நற் பணிவோடும் தலை குனியாமல் தன் தரம் குன்றாமல்
எந்நாளும் இடர் வாராது காத்து நிற்பவன் வீரன் !...
வெள்ளை மனமும் சிறு பிள்ளை குணமும் உள்ள மனிதன்
எவனோ அவனே உண்மயான புனிதன் !...
நாட்டின் நலனே தன் நலனாய் எந்நாளும் உழைக்கும் ஒரு வீரன்
தூற்றும் மக்கள் துயரைக்கூட துடைத்தெறிவான் அவன் தலைவன் !...
நோட்டம் விட்டு நோட்டம் விட்டுநொந்த உடலை தேற்ற மறந்து
ஈற்றில் கடமை பெரிதென எண்ணி இரவும் பகலும் விழித்திருப்பானே
காவலன் !!..

0 Comments