வாழ்வில் உயர்வும் தாழ்வும், மகிழ்ச்சியும்
துக்கமும் சேர்ந்தே வரக்கூடியது.
சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்கு,
மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை.
மண்டையை பிளக்கும் வெயிலுக்கு இடையில்
மண்பானை தண்ணீர் குடிப்பது போல,
மனத்தளர்ச்சி ஏற்படும் போது கண்களை மூடி
நான் வலிமையானவன். நான் கோபப்படமாட்டேன்
எனக் கூறிக்கொள்ளுங்கள்.
இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.
மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம் தான்.
மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள்.
மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.
புதிய காற்று, சூரிய ஒளி, தண்ணீர், உணவு, குழந்தைகள் பூக்கள்,
வாழ்க்கைப் பாடங்கள், புத்தகம், செல்ல பிராணிகள், நடை பயிற்சி, நடனம்,
தூக்கம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களா?
அப்படி என்றால் மனதுடன் பேசுங்கள், வாழ்கையில் எனக்கு என்ன தேவை?
என மனதிடம் கேளுங்கள். கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.
தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம்.
ஆனால், தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை
தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்?
நீங்கள் தோல்வியடைவில்லை; உங்கள் முயற்சிதான்
தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.
மன இறுக்கம் தவிர்போம்..!
மனமகிழ்ச்சி அடைவோம்..!


0 Comments