வாழ்க்கைச் சதுரங்கத்தில் வகைவகையாய்க் காய்கள்..
கண்டபடி நகர்த்தினால் காரியம் கெட்டுவிடும்- கைமேல் தோல்விதான்..
உறுதியாய் இரு, நகர்த்திடு காய்களை நிதானமாய்
நாடிவரும் வெற்றி நம்மைத் தேடி...!
லட்சியத்தில் கொண்ட கொள்கையில் -உறுதியாய் இரு
உலகாளும் எண்ணமானாலும்ஒருநாளும் துவளாது - உறுதியாய் இரு..!
நேற்றுவரை திசைமாறியே வீசிய காற்று நாளை நம் பக்கம் வீசக்கூடும்..
தேதிகள் கிழிக்கப்படும்போது யாரும் அறிவதில்லை
அடுத்த நொடியின் நிகழ்வை..!
என்றாலும்.. உறுதியாய் சொல்வேன்
நடப்பதனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையில்தான்..!
உறுதியாய் இரு லட்சியத்தில் கொண்ட கொள்கையில்...!
உறுதியாய் இரு ஒவ்வொரு விடியலும் நமக்கான நம்பிக்கையே.
தடைகள் வந்தாலும் படிகள் சரிந்தாலும்
இலட்சிய தணலை அணையாது காத்திரு
வலிகள் ஏற்றுக்கொள்வதற்காக அல்ல
போராடுவதற்காக உறுதியாய் இரு
வலிகள் வாழ்க்கையை காற்றுக்கொடுக்கும்
வாழ்வதற்கு கற்றுக் கொடுக்கும்

0 Comments