எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் - வாழ்வியல் சிந்தனை

ஏமாற்றங்களுக்குக் காரணம் எதிர்பார்ப்புகள்.

எதிர்பார்ப்பது நிறைவேறாதபோது

அந்த நிராசை உறவுச் சிக்கல்களாய்,

குடும்பப் பிரச்சினைகளாய்,

பின் மெல்ல மெல்ல நோய்களாய் மாறும்.

எதிர்பார்ப்புகள் வருவது இயற்கை. 


எந்த நிலையிலும் எதிர்பார்ப்புகள் உண்டு.

நினைத்தது நடந்தால் சந்தோஷப்படும் நாம், 

பொய்த்தால் எதிராளியைக் குறை கூறுகிறோம்.

காதல், காமம், குடும்பம், வாழ்வு முறை 

எனப் பல விடயங்களில் நிஜத்தோடு 

தொடர்பில்லாத எதிர்பார்ப்புகளால் 

பலர் தங்கள் வாழ்க்கையில் தவறான 

முடிவுக்கு வருகின்றனர்.


எதிர்பார்ப்புகள் குறையும்போது

வாழ்க்கை அழுத்தமில்லாமல் அழகாக மாறும்.

எதிராளியின் எதிர்பார்ப்புகள் புரிய ஆரம்பிக்கும்.

அது புரிதலை எளிமைப்படுத்தும்.

குறிக்கோள்கள் இருக்கும் போது..!

கடமைகளைச் செய்யலாம்.

எண்ணத்தை வெளிப்படுத்தலாம்

எதிர்பார்ப்புகளின் பாரம் இல்லாமல் 

அவைகளை இயல்பாய் மலர விடுங்கள்!


Post a Comment

0 Comments