பட்டா, சிட்டா, அடங்கல்.. இப்படி எல்லா கேள்வி பட்டு இருப்போம். அப்படினா என்ன ??

பட்டா :

                ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ். அதாவது நிலா உரிமைச் சான்று. 

சிட்டா :

                குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் 

அடங்கல் :

                நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப் பகுதியில் உள்ளது என்கிற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம் 

கிராம நத்தம்  :

                ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்  பட்டுள்ள நிலம் 

கிராம தானம்  :

                கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்க பட்டுள்ள நிலம்.

தேவ தானம்  :

                கோயில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.

இனாம்தார்  :

                பொது நோக்கதுக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்கும் சொல். 

விஸ்தீரணம்  :

                நிலத்தின் பரப்பளவு, எல்லைகளை குறிப்பது. 

ஷரத்து  :

                பிரிவு.

இலாகா  :

                துறை. 

கிரையம்  :

                நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப் படுத்துதல். 

வில்லங்க சான்று  :

                ஒரு நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதை எவ்வாறு வாங்கினார்கள். எவ்வாறு அந்த நிலத்தை அனுபவிக்கிறார்கள் போன்றவற்றை அலசும் பதிவுத்துறை ஆவணம். 

புல எண் :

                நிலா அளவை எண்.


Post a Comment

0 Comments