போகி பண்டிகை அன்று காப்பு கட்டுதல் என்பது நாம் பின்பற்றி வரும் ஒரு கலாச்சாரம்

    போகி பண்டிகை அன்று, வீடு எல்லாம் சுத்தம் செய்து பின்னர் காப்பு கட்டுதல் நடைபெறும், காப்பு கட்டுதல் என்றால் என்ன? என்ன என்ன பயன்கள் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவு பட தெரிந்து கொள்ளலாம் . 

காப்புக்கட்டு பற்றி சிறு விளக்கம்

  • ஆவாரம் பூ
  • பீளைப்பூ
  • வேப்பிலை
  • தும்பை செடி
  • நாயுருவி செடி

என 5 வகையான செடிகள் காப்புகட்டிற்கு பயண்படுத்த வேண்டும். ஆனால் தற்காலங்களில் 3 வகை மட்டுமே பயண்படுத்துகிறார்கள்

தைமாதம் முதல் உத்ராயணத்தில் ஏற்ப்படும் பருவ நிலை மாற்றத்தால் நிறைய நோய்கள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும்.

மார்கழிமாதம் ஓசோன் படலம் பூமிக்கு அருகில் இருப்பதால் அதிக கதிர்வீச்சு பாதிப்பு வராமல் இருக்க வாசலில் கோலமிட்டு மாட்டுசானத்தில் பூசனிப்பூ வைத்திருப்பார்கள்.

மார்கழிமாதம் வைகுண்டம் செல்ல வேண்டிய முன்னோர்கள் இங்கேயே தங்கிவிடாமல் இருக்க அவர்கள் வாசனையை நீக்க அவர்கள் பயன்படுத்திவந்த பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.

மேலும் பருவ நிலை மாற்றத்தால் நோய் தொற்று வராமல் இருக்க வீட்டிற்கு சுண்ணாம்பு பூசி பயன்படுத்தாத பழைய பொருட்களை எரிப்பார்கள், பின்பு காப்பு கட்டுவார்கள் இது போகி பண்டிகையாகும்.

    தைமாதம் மகர மாதம் தட்சிணாயணம் முடிந்து உத்திராயணம் ஆரம்பமாகும் காலம் சூரியன் வடக்கு நோக்கி நகர்வது போல் தோற்றம் வரும். பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும் .

சூரியனின் தீட்சன்யம் அதிகமாக பூமியில் விழும்  இதற்கு கரிநாள் என பஞ்சாங்கத்தில் போடப்பட்டிருக்கும். இந்த வெப்பத்தின் தாக்கம் பல நோய்களை கொண்டுவரும்.

நமது கிராம்ப்புறங்கில் நடைபயணம் செய்பவர்கள் இந்த வெப்ப தாக்கம் வராமல் இருக்க ஆவாரம் பூவை தலை பாகைக்குள் வைத்து கட்டிக்கொண்டு செல்வார்கள் சில கிராமங்களில் சமையல் அறையில் அதிக உஷ்ணம் வராமல் இருக்க ஆவாரம் பூவை கொத்தாக் வைத்திருப்பார்கள். உஷ்ணதாக்கத்தால் உடல் சமநிலை இழக்காமல் இருக்க ஆவாரை பயன்படும் 

    மேலும் மகர சங்கராந்தி நுழையும் காலம் இம்மாத சங்காரகனால் அதிகபாதிப்பு தைமாத்தில் வரும் இதனை தடுக்கவும் ஆவாரை பயன்படும்

பீளைப்பூ அல்லது பூளைப்பூ 

இது உடலில் உள்ள நீர்சத்துக்களையும் தாதுக்களையும் சமநிலையில் வைக்கும் உஷ்ணத்தால் கிட்னி பாதிக்கப்படாமல் பாதுகாக்கும். 

நீரடைப்பு கல்லடைப்பு நீங்காக் குடற்சூலை

பேதிட ரிரந்தகணம் போக்குங்காண் வாரிருக்கும்

பூண்முலையே கேளாய் பொருந்துஞ் சிறுபீளை யாமிது கற்பேதி யறி' 
    என்கிற பதார்த்த குணபாடம்(219) சிறுபீளையின் மகத்துவத்தை விளக்குகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள். 

பூளைப்பூ 
பூளைப்பூ 








வேப்பிலை 

    உஷ்ணத்தால் சருமம் பாதிக்கப்பட்டு அம்மை தோல்நோய்கள் வராமல் இருக்க வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

வேப்பிலை

    இப்போது புரிகிறதா? காப்புக் கட்டு வெறும் சடங்கு மட்டும் அல்ல. அதற்குப் பின்னால் இருப்பது ஆதித் தமிழனின் மருத்துவ அறிவு. இந்த அறிவைத் தலைமுறைகள் தாண்டிக் கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை. இதற்காக அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. இன்று காப்புக் கட்டும் போது, அதை எதற்காகக் கட்டுகிறோம் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் போதும். 

நாயுருவி

    வெப்பத்தால் பக்கவாதம் (sunstroke) வராமல் இருக்க நரம்புமண்டம் பாதிக்கப்படாமல் இருக்க புதனிற்குறிய நாயுருவி காப்புக்கட்டிற்கி பயன்படுத்தப்படுகறது. நாயுருவிப் பூவின் ஏராளமான உயிர்வளியற்ற எதிர்ப்போருள் பண்புகள் உள்ளன, இது நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. 

            இது பல்வேறு நன்மைகளை உள்ளடக்கி வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதால் உபயோக படுத்த படுகிறது.

நாயுருவி
நாயுருவி

நாயுருவி




    




ஆவாரை  

    `ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' என்கிறது சித்தர் பாடல். உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. தரிசுகள் எங்கும் தானாக விளைந்து கிடக்கும் அற்புத மூலிகை. இன்றைக்கு உலகை உலுக்கி வரும் கொடிய நோய்களான சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய்க்குத் தீர்வாக இருக்கிறது ஆவாரை. கிராமங்களில் ஆடு,மாடு மேய்ப்பவர்கள், வெயிலினால் ஏற்படும் சூட்டைத் தணித்துக்கொள்வதற்காக, தலையில் ஆவாரை இலையை வைத்துக் கொள்வார்கள். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கிரீன் டீ யை விட, அற்புதமானது ஆவாரை நீர். கையளவு ஆவாரம் பூவை, தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் அல்லது பனங் கருப்பட்டி கலந்து அருந்தினால். உடல் புத்துணர்வு பெறும். சரும நோய்கள் குணமாகும். 

ஆவாரை

    ஆவாரை இலையை, கல்லில் வைத்து ஒன்று இரண்டாகத் தட்டி, தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு, கண் வழியே வெளியேறுவதை உணர முடியும். உடல் துர்நாற்றத்தைத் துரத்த, உடலை மினுமினுப்பாக்க, தலைமுடி வளர என ஆவாரையின் பயன்பாடு அநேகம். ஆவாரை இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய ஐந்தையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினமும் ஒரு தேக்கரண்டி வாயில் போட்டு வெந்நீர் பருகி வந்தால் உடல் சோர்வு, நா வறட்சி, நீரிழிவு, தூக்கமின்மை போன்ற நோய்கள் குணமாகும். ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும். இத்தனை அற்புதங்கள் இருப்பதால்தான் ஆவாரையைக் காப்புக் கட்டில் வைத்தார்கள். 

தும்பை செடி

    நல்ல எதிர்ப்புசக்தியையும் ரத்தத்தில் மற்றும் உடலில் உள்ள முக்கிய நீர் பகுதி இதயத்தை நுரையீரலை கபாலத்தை நாசியை சூழ்ந்துள்ள நீர்ப்பகுதிகளில் நோய்தொற்று வராமல் பாதுகாக்கவும் மயக்கம் வராமல் பாதுகாக்கவும் பிதுர்களின் தோஷம் வராமலும் தடுக்கிறது (மரபணு நோய்).

தும்பை

மேலும் கீழக்கண்ட காரணத்திற்க்காகவும்  காப்பு கட்டுதல் செய்ய படுகிறது. என்பது முன்னோர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல். 

காப்பு கட்டுதலின் சிறப்பு :
🌟 போகி நன்னாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் என்பது வழக்கம். இந்திரனுக்கு, போகி என்று வேறு பெயர் உள்ளது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்றபோது பழைய குப்பைகளைத் தீ மூட்டி வைப்பார்கள்.
🌟 கிராமங்கள் சிலவற்றில் இந்த நாள் காப்பு கட்டும் நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ இவற்றால் காப்பு கட்டி, துணிகளில் முடிந்து தோரணம் போல வீட்டிலும் கோவிலிலும் கட்டி வைப்பது தான் காப்பு கட்டுதல் என்று பெயர். இதனால் தீயவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.
🌟 பண்டிகை காலங்களில் வீட்டில் உள்ளவரை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என எண்ணி, காப்பு கட்டுதல் ஒரு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
🌟 இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும், வீட்டின் முகப்புகளிலும் காப்பு கட்டி தோரணங்களாகத் தொங்கவிடுவார்கள்.
🌟 நோய் எதிர்ப்பான்களாகப் பயன்படும் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, துளசி கொண்டு வீட்டின் முகப்புகளிலும், தெருக்களிலும் தோரணங்களாகத் தொங்கவிடுவார்கள். இதனால் நோய் தாக்கும் பூச்சிகள் வருவதில்லை.
🌟 தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு பூலாப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி அதன் மேல் தானியங்களைக் கொட்டி வைப்பார்கள். இதன்மூலம், புதிய தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்பு கட்டு இயற்கை பூச்சி கொல்லிகளாக பாதுகாக்கின்றது.
🌟 பூச்சிகள் அண்டாமல் காப்பதால் காப்பு கட்டுதல் என்றாகியது. பழைய தானியங்கள் கழிந்து புது தானியங்கள் வருவதால் பழையன கழிந்து புதியன புகுதல் வருதல் என்றாகியது.

அனைவரும் காப்புக்கட்டுங்கள். நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிய ஆரோக்ய வாழ்வின் பாரம்பர்யத்திற்கு நன்றி சொல்லுங்கள்

அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருங்கள்🙏🙏





Post a Comment

0 Comments