ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள செ.மேலப்பளையம் எனும் சிற்றூரில், 1904 அக்டோபர் 4 ஆம் தேதி பிறந்தவர், குமரன்.
நெசவுத் தொழிலில் ஈடுபட்ட அவர், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் மாற்று தொழில் தேடி திருப்பூர் சென்றார்.
அங்கு சென்ற அவர் அந்த நேரங்களில் காந்திய கொள்கைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக அவர் சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
1932 ல் காந்தியின், "சட்ட மறுப்பு இயக்கம்" துவங்கியது. அதன் மூலமாக திருப்பூரில், தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில், குமரன் பங்கேற்றார்.
ஜனவரி 10 ஆம் தேதி, கையில் தேசியக்கொடி ஏந்தி அணிவகுத்து சென்றார். அப்போது, காவலர்களால் தாக்கப்பட்டார். மண்டை பிளந்தும், கையில் தேசிய கொடியை ஏந்தியபடியே மயங்கி விழுந்தார்.இதனால் , 'கொடி காத்த குமரன்' என போற்றப்பட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, ஜனவரி 11 ஆம் தேதி தனது 28 ஆவது வயதில் உயிரிழந்தார்.



0 Comments