பங்குசந்தைனா என்ன?? எப்படி எல்லா நம்ம Trade பண்ணலாம்?? தெருஞ்சுக்கலாம் வாங்க !!

               பங்குசந்தை அப்படின்னா பெருவாரியான மக்கள், அத சூதாட்டம், ஏமாத்து வேல அப்டின்னு தான் நெனைக்குறாங்க.. ஆனா அது சரியா சொல்லனும்னா.. ஒரு கம்பெனிய பங்கிட்டு மக்கள் மத்தில மேஜர்ரான இரு எக்ஸ்சேஞ் மூலமா மக்கள்ட்ட நேரடி புழக்த்துல விட்றகுன்னு 


        சிம்பிள்ளா சொல்லலாம். ஒரு நிறுவனத்துல இருந்து பங்குகள வாங்குறதால, அந்த நிறுவனத்தோட பங்குதாரர்களா ஆகுறோம்.  அந்த நிறவணம் தன் லாபத்தால வளர்ச்சி அடைஞ்சு, அந்த கம்பெனியோட பங்குகள் விலை கூடன்ன பிறகு அத வித்து லாபம் அடையலாம். 📌 அதுவே நேர் எதிராக மாறவும் வாய்ப்பு இருக்கு.!!

    இப்ப நம்ம நேரடியா விசயத்துககுள்ள போயிடுவோம்.. 😊 ஏன்னா பொதுவாக புக்ஸ்ல 📚 படிச்சா பங்கு சந்தையோட முன்னுரையே சுமார ஒரு 5 - 6 பக்கம் இருக்கும். இதுல லாபம் / நட்டம் என்பது எப்டி உருவாகுதுன்னு சொல்றேன்.  

   ஒரு கம்பெனியோ பங்குகள வாங்கிட்டு., அதோட circumstances (Fundamentals / financials) பொறுத்து ஏறும் இருங்கும்ன்னு ஒரு அளவுக்கு கணிக்க முடியும்.  ஒரு கம்பெனியோட பங்குகள வாங்கி அது விலை ஏறிய பின்னால வித்தும், லாபம் பாக்கலாம் (long selling) இல்லனா அதே குறிப்பிட்ட பங்குகள வித்துட்டு, அதோட விலை எறுங்கன பிறகு அத வாங்கியும் லாபம் பாக்கலாம் (short selling).  இது நடக்கிறது எல்லாமே மார்கெட் forces  ன்னு சொல்ல கூடிய demand & supply தான்.  

    மார்க்கெட்ல (bidding - வாங்க கேட்கும் விலை), (ask - விற்க கொடுக்கும் விலை) விலைன்னு சொல்வாங்க (பழைய ஏல முறையே தான், இப்போ digitalized format) அவ்ளோதான் 😄 இப்போ.. பங்குகள வாங்கினுதம் அந்த குறிபிட்ட நிறவனத்தோட பங்குககுகரகான டிமென்ட் ஏறும் போது விலையும் ஏறும், அதற்கு நேர்மாறானது.. அதோட சப்ளை அதிகமா இருக்கும்போது, விலை குறையும்.    அவ்ளோ தாங்க.! 

    பங்குசந்தை வியாபாரம் (Equity market) நடக்குறத மூனு செக்மெ்ன்டா பிரிக்க பட்டிருக்கு.. 
1) Intraday, 
2) Delivery, 
3) Derivatives.

    இதுல எந்த செக்மெ்ன்டல trade பின்னாலும், நம்ம நாட்டுக்கான security exchange (NSE/BSE) கிட்ட தான் பன்ன முடியும்.  அதுவும் நேரடியா பன்ன முடியாது

    எந்த செக்மெ்ன்ட்ல Trade பன்னனும்னாலும். மேலே குறிப்பிட்ட exchange ஆல் அங்கீகரிக்கப்பட்ட ப்ரோகர் மூலமாக மட்டும் தான் பன்ன முடியும்.  அதுக்கு உண்டான கட்டணம் (brokerage) நம்ம தான் ஏத்துக்கனும்.  ப்ரோக்கர் நமக்கு கொடுக்கிற பலன் தான், (App, fundamentals of stock & & leverages) லிவரேஜ் அப்டின்னா. உங்க டிமேட் அக்கவுன்ட் இல் இருக்கும் தொகையின் அளவை பொறுத்து, குறிப்பிட்ட தொகையை ப்ரோக்கரிடம் கடனாக பெற்று trade பன்னலாம். (Strictly not advisable unless learnt) 

    INTRADAY பத்தி சொல்லனிம்னா, ஒரு நாள்ளைக்குள்ளவே  (one market day) ஒரு transaction ஓட இரு பகுதிகள் (Buy & sell)  ரெண்டுமே நடந்து முடிஞ்சரனும்.  அதாவது காலைல 9.15 to 3.10 க்குள்ள முடிஞ்சரனும்.. லாபம் என்றாலும் சரி, நட்டம் என்றாலும் சரி அத முடிஞ்சரனும். அப்டி முடிக்கல அப்டினா அதுஅடுத்தது Auto square off ஆகிடும். அப்டின்னா.. நம்ம முடிக்கலனாலும்.. நம்ம broker அத என்ன விலைக்கு போகுதோ அத வித்துருவான்.  இதான் இதோட ப்ரைம் & மேஜர் கண்டிஷன்.  அடுத்தது DELIVERY TRADING, இதுல மேல குறிப்பிட்ட எந்த கண்டிஷனும் இதுல அடங்காது.  

  இதுல நம்ம வாங்குற பங்குகள எத்தனை காலம் வேணுனாலும் வெச்சுகலாம்.. இந்த டெலிவரி ட்ரேடிங் கீழ நாம்ம holding எடுக்குற பங்குகள நம்ம பேருல, NSDL (National Securities Depository Ltd) என்றஅரசு நிறவணம், வாங்குபவரோட பேர்ல hold பன்னி வெச்சுருக்கும்.  இதுல பெரும்பாலும் ரிஸ்க் கம்மி, ஏன்னு கேட்டிங்கன்னா, வாங்கிய நாள்ல குறிபிட்ட கம்பெனியோட பங்குகளின் விலை குறஞ்சாலும், அடுத்த நாள் ஏறும்னு நம்ம ஹோல்ட் பன்னலாம், காரணம் எந்த டைம் லிமிட் (time limit) எதுவும் கிடையாது. ( Long term - High returns)பெரும்பாலும் long term investment க்காக வேண்டி இந்த ஆப்சன்ன தேர்ந்தெடுத்து ட்ரேட் பன்னுவாங்க.  

    ஆனா இந்த முறைல trade பன்றதுக்கு முழு செட்டில்மென்ட்கான மொத்த பணமும் நம்ம  Demat Accountல்ல இருக்கனும். (fully paid / settled) அடுத்தது  DERAIVATIVES.  இது கொஞ்சம் பெரிய டாபிக், புரிஞ்சிக்கவும் கொஞ்சம் டைம் எடுக்கும்.  இப்போ இந்த derivatives க்கும் Intraday & delivery trading க்கும் எந்த வித சம்மதமும் இல்ல.. 

    இது என்னன்னு சொல்லனும்னா, ஒரு நிறவனத்தோட பங்குகள்ள மட்டும் நேரடியா முதலீடு (வியாபாரம்) செய்யணும்னு அவசியம் இல்ல.. அந்த நிறுவனத்தோட அடிப்படை சொத்து மதிப்ப (stock, land & building, machinery) கணக்குல வெச்சுட்டு அதுல இருந்து திரிக்கபடக்குடிய (derive செய்யப்பட்ட) Derivaties segment -லும் வாங்கி வித்து லாபம் ஈட்டலாம்.  லாபமும் அதிகம், ரிஸ்க்கும் அதிகம்.  

        Derivaties செக்மெ்ன்ட்ல trade பன்னனும்னா.. அதிக படியான மார்கெட் knowledge . (I.e, technical knowledge) வேணும்.  இத Option Trading ன்னு சொல்வாங்க.. (எக்கசக்கமா இருக்கு 😁😁) இதுல ரிஸ்க் என்னன்னு கேட்டிங்கன்னா, இதுல 1 unit,  10 unit ன்னு லாம் வாங்க முடியாது. வாங்கினா ஒரு குறிப்பிட்ட மினிமம் units அதாவது, அந்த நிறவணம் நிரனயிச்ச எண்ணிக்கையான LOT ஆஹ் தான் வாங்க முடியும்.   
   
        Eg, ஒரு மொத்த வியாபாிகிட்ட போனா, ஒரு கிலோ அரசி கேட்டா, தரமாட்டாரு.. மினிமம் 5 கிலோ அரிசிப்பையாச்சும் வாங்கனும்னு சொல்லுவாரு. அதே தான் இங்கயும்.  இப்ப இதுல ரிஸ்க் என்னனா, ஒரு யூனிட் நட்டமாச்சுன்னா சரி, அதே நட்டம், இப்ப மொத்த லாட்டுக்கும் நடக்குறப்போ அது பெரிய நட்டமாயிரும் அவ்ளோ தான்ங்க. 

    இதுல மொதல்லயையே சொல்லீருக்க வேண்டிய விசயம் Demat Account, (Dematerialized Account) ப்ரோக்கர் மூலமா, இந்த அக்வன்ட்ட எக்ஸ்சேஞ் கிட்ட ஓப்பன் பன்னா மட்டும் தான் trade  பன்ன முடியும்!! 😄

    இன்னும் எக்கச்சக்மா இருக்கு, இந்த பங்குச்சந்தைல, இன்னும் Sensex, Nifty - Index trading (options), commodity, forex ன்னு நிறைய, நிறைய இருக்கு.  போட்டு அருக்க கூடாதுன்னு நெனச்சும் இவ்ளோ வந்துடுச்சு.. 😊     

Post a Comment

0 Comments