இன்று
மகளிர் தினம் என்று அதிகாலையில் இருந்தே ஊடகங்கள் உணர்ச்சிகள் பொங்கிட செய்திகளை
கூறி கொண்டு இருந்தது.
அதில் சாதனை
பெண்களின் பெயர்கள் வரிசையாக பட்டியல் இட்டு அடுக்கபட்டு கொண்டு இருந்தது. ஊடகங்களை
விட்டு விட்டு வெளியே வந்து பார்த்தேன்.
வேகமா கையில்
மண்வெட்டியுடன் வெளுத்த துண்டை தலையில் காட்டியவாறு பார்வதி அம்மாள் வந்து கொண்டு
இருந்தாள்
என்னங்க அம்மா
இவ்வளவு வேகம் என்றேன் ஆமா கண்ணு வேலை செய்யப் போறேன் ஏற்க்கனவே நேரமாகிருச்சுன்னு
சொல்லிட்டு போனாங்க அவங்களுக்கு 50வயது இருக்கும்.
காலையில போன
சாயந்தரம் தான் வருவாங்க வரும் போது பார்த்த தலை மேல விறகு கட்டும் இடுப்புல
இருக்கிற சேலையில கீரையும் முடடிஞ்சு இருக்கும்...!
வரும் போதே
எவ்வளவு தான் உழைச்சிட்டு வந்தாலும் அந்த சோர்வு தெரியாத ஒரு சிரிப்பு
இருக்கும்..!
ஒரு சில நாள்
எங்க வீட்டுக்கு வந்தா அவங்களோட கதைய சொல்லுவாங்க தனக்கு 14 வயதிலேயே
திருமணம் முடிந்ததாகவும் அதுக்கடுத்து தன்னோட பசங்களுக்காக சம்பாதிக்க போன கணவர் உடம்பு
சரியில்லன்னு திரும்பி வந்ததாகவும்...!
அதுல இருந்து
அவரோட மருத்துவ செலவு பசங்க படிப்பு செலவுன்னு எல்லாம் தான் வேலைக்கு போறதுல தான்
ஓடுச்சுன்னு சொல்லுவாங்க..!
பசங்களும்
வேலைக்காக பட்டணம் போய்ட்டாங்க இப்பவும் பார்வதி அம்மவோட கணவருக்கு இவரோட உழைப்புல
வர்ற காசுதான் மருந்து வாங்குறாங்க...!
பசங்களோட
பணத்தை அவங்க எதிர்பார்க்கப்படுகிறது இல்லை ஏன்னு கேட்டா உடம்பில வலு இருக்கிற
வரைக்கும் உழைக்கனும் நான் அவங்களுக்கு பாரமா இருக்க விரும்பலன்னு சொல்லுவாங்க..!
எத்தனையோ முறை
அவங்களை டவுனுக்கு கூப்பிட்டும் போகல தன்னோட கணவரை டவுன் ஆஸ்பத்திரிக்கு
கூட்டிட்டு போனாலும் வீடு வந்தாதான் தம்பி எனக்கு நிம்மதியா இருக்கும்முன்னு
சொல்லுவாங்க அதை ஆமோதிக்கிற மாதரி கையிறு கட்டில்ல படுத்து இருக்கிற அவங்களோட
கணவர் சிரிப்பார்...!
எனக்கே அவங்கள
பாக்கிறப்ப ஒரு தன்னம்பிக்கையும் தைரியமும் வரும் இன்னைக்கு பார்வதியம்மாள
பார்த்து மகளிர் தினம் வாழ்த்து சொல்லனுன்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம் வர...!
அவங்க வீட்டுக்கு போனேன் இன்னைக்கு மகளிர் தினம் பார்வதி அம்மா வாழ்த்துக்கள் என்றேன்...!
அப்படின்னா
என்ன தம்பி என்றார்... வாய்ப்புகள் குறைவு தான் அவர் மகளிர் தினத்தை பற்றி
அறிந்திருக்க...! புன்னகைத்தேன்.
(ஒவ்வொரு பெண்களும் ஊடகங்கள் பட்டியல் இடாத சாதனை பெண்களே)
மகளிர் தினம் ஏன் கொண்டாடுகிறோம்?
உலக மகளிர் தினம் ( International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
18 ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர்.வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857 ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது.
பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர்,
1857ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை என அணிவகுப்புக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அதில் பிரதானமானது, பெண்களுக்கு முறையான வாக்களிக்கும் உரிமை வழங்க வேண்டும் எனபதே,
அப்படியே எழுந்தது எழுச்சி! அடுத்தடுத்து மாநாடுகள், அணிவகுப்புகள். இக்காலகட்ட போராட்டங்களில் ஒரு வித்தியாசமான முழக்கமும் லாரன்ஸ் நகரிலிருந்து ஒலித்தது. அதுதான் Bread and Roses! பிரட்டும், ரோஜாவும் எல்லாருக்கும் வேண்டும். உணவும், அன்பும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே.
1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
இப்படியான பல போராட்டங்களிலிருந்துதான், பெண்களுக்கென ஒரு தினம் வேண்டும் என்று ஒரு நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கொல்லோண்டை, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது.
தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
அவர்களைப் பொருத்தமட்டில் இது மகளிர் தினமல்ல. மகளிர் விடுதலை தினம்.
மகளிர் தின நிறங்கள்
மகளிர் தினத்திற்கு நிறங்களும் உண்டு. ஊதா, பச்சை மற்றும் வெள்ளை. ஊதா நீதி மற்றும் கண்ணியத்தை குறிக்கிறது. பச்சை நம்பிக்கையை குறிக்கிறது. வெள்ளை நிறம் ஒரு சர்ச்சைக்குரிய தூய்மையைக் குறிக்கிறது.
இனி, மகளிர் தினத்தைக் குறிக்க 'செட் saree' எடுக்க, இந்த நிறங்களைத் தேர்ந்தெடுக்கலாம். மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!
2022ஆம் ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருளாக ஐ.நா
முன்மொழிந்திருக்கும் நோக்கம், ''பெண்களுக்கு எதிரான
வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வாக்குறுதி
கொள்வோம்" என்பதே...!!!
0 Comments