இந்தி திணிப்பு எதற்காக? ஏன்?

1)         கல்வி என்பது அறிவல்ல. அது ஒரு தகுதி மட்டுமே. அதுவும் அவசியமானவருக்கு மட்டுமே. அனைவருக்கும் அல்ல. 

ஆனால் இங்கு நாம் அனைவரும் மதிப்பெண் தான் நமது பிள்ளைகளின் அறிவு என தீர்மானித்து கொண்டு கல்வியைத் திணித்துக் கொண்டிருக்கிறோம். 



2) மொழி என்பது நமது உணர்வுகளை, எண்ணங்களை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக உருவாக்கிக் கொண்ட ஒரு ஊடகம். ஒவ்வொரு இனக் குழுவிற்கும் ஒவ்வொரு மொழி. நமது குழுவில் நாம் பேசிக் கொள்வது தாய்மொழி. அடுத்த குழுவினர் பேசிக் கொள்வது அவர்களுக்கு தாய்மொழி. நமக்கு அது பிற மொழி. 

வணிகம் என்ற ஒன்று எப்போது உருவானதோ அப்போது தான் இங்கு ஒவ்வொருவரும் பிற மொழியை தான் கற்க வேண்டிய, தமது மொழியை பிறருக்கு கற்பிக்க வேண்டிய அவசியம் உருவானது. கடல் கடந்து தெற்காசிய நாடுகளில் தமிழ் மொழி வளர்ந்ததும் வணிகத்தால் தான். உலகம் முழுவதும் ஆங்கிலம் வளர்ந்ததும் வணிகத்தால் தான். 

தற்போது கல்வி மூலமாக இந்தி  மொழி திணிக்க மேற்கொள்ளப் படும் முயற்சியின் பின்னணியில் கூட வணிகம் மட்டும் தான். 

ஏன் எப்படி என அறிவது நமது அறிவைப் பொருத்து.. 

Post a Comment

0 Comments