களைக்கொல்லி எப்படி வேலை செய்கிறது? வாருங்கள் பாக்கலாம்

    களைக்கொல்லி எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். துரதிஷ்டவசமாக படிக்காதவன் வாங்குகிறான். படித்தவன் ஏமாற்றுகிறான். (கண்ணிருந்தும் முகத்திரண்டு புண்ணுடையார்)


    ரவுண்டப் என்னும் களைக்கொல்லி "கிளைபோசேட்" என்ற ரசாயனமாகும். இது அமில வகையை சேர்ந்தது. ஆகவே இதனை தண்ணீரில் கறைத்தோ, உப்பாகவோ, விற்கிறார்கள். இது செடியின் வளர்ச்சிக்கு உதவும் நொதியை (வளரும் செல்கள்) தாக்கி அழிக்கிறது. ஆகவே விரைவாக வளரும் செடிகளும், அகலமான இலைகளும்தான் இதன் இலக்கு. நல்ல பயிரும் இதற்கு விதி விலக்கல்ல. ஆனால் விதை முளை விடுவதை கட்டுப்படுத்தாது. எனவே களை வளராமல் தடுக்க மூடர்கள் லிட்டர் லிட்டராக மண்ணில் கொட்டினாலும் பிரயோஜனம் இல்லை.
    எப்படிப்பார்த்தாலும் இது ஒரு ரசாயனம். C3H8NO5P இதை கவனித்து பாருங்கள். இதில் உள்ளது கார்பன்,ஹைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ். அதோடுகூட மேலும் பலவித ரசாயனங்கள் (குளோரின்) சேருவதாலும் வெப்பத்தாலும் சிதைந்து பல புதிய ரசாயனங்கள் மண்ணில் உருவாகலாம். எல்லா பூச்சி கொல்லி மருந்துகளும், களைக்கொல்லிகளும் வளரும் செல்களை சிதைப்பதும், செயலிழக்க செய்வதுமாகிய நாசகார வேலையைத்தான் செய்கின்றன. இவை மூளையை பாதிக்கும். கொசு மருந்துகள் கொசுவை மயங்க வைக்கின்றனவா அல்லது கொல்லுகின்ரனவா? கொசு மருந்துக்கும், நமது ஆஸ்பத்திரியில் கொடுக்கும் குளோரோபாரம் எனும் மயக்க மருந்துக்கும், டிடிடி பூச்சி கொல்லிக்கும், போதை பொருளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எல்லாமே நறுமண ஹைட்ரோகார்பன் வகையைச் சார்ந்தது. உங்கள் குழந்தை வொயிட்னரை மோந்து பார்ப்பதும், ஆக்ஸ் அடித்துக்கொண்டால் பெண்கள் மயங்குவதும் (!), தார் ரோடு போடும்போது அந்த வாசனையை நீங்கள் விரும்புவதும் இதனால்தான்.
    சித்தம் பேதலித்துவிடும் அய்யா ! தண்டு வடம் (மூளை) பாதிக்கும். அசதி எப்போதும் உடலில் இருக்கும்.
    சுருக்கமாக சொன்னால் களைக்கொல்லிகள் செடியை மட்டுமா அளிக்கும்? மண்ணிலுள்ள நுண்ணுயிர்களையும் சேர்த்துத்தான். நம் வயிற்றில் மற்றும் கால்நடைகளின் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்களையும் சேர்த்துத்தான். எனவே வியாதிகளுக்கு பஞ்சமில்லை. வயிற்று வலிமுதல் கான்சர் வரை காரண்டி.
    இதற்கெல்லாம் ஆதாரம் தேடிப்பார்க்காதீர்கள். கிடைக்காது. பல காலமாக போலி அறிவியலாளர்கள் கைக்கூலிகள் ஆராய்ச்சி முடிவுகளை மாற்றி எழுதி விட்டார்கள். ஆகவே சந்தேகம் இருந்தால் கொஞ்சம் இந்த கொடிய விஷங்களை (மொநோகுரோட்டபாஸ் உட்பட) தொட்டு நக்கித்தான் பாருங்களேன்.
உயிரோடு இருந்தால் நாளை சந்திப்போம்.

பதிவு : #ulavar_anand | #உழவர்_ஆனந்த்

Post a Comment

0 Comments