தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது !!!

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது.. எந்தெந்த விகிதத்தில் புதிய மின் கட்டணம் இருக்கும் என்பதை தொகுத்துத் தந்து இருக்கிறோம். 



புதிய மின்கட்டணம்: முக்கிய அம்சங்கள்!

- குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத்தலங்கள் ஆகிய பிரிவுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தொடரும்.

- 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

- 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 உயர்த்தப்பட்டுள்ளது.

- 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.72.50 உயர்த்தப்பட்டுள்ளது.

- 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.297.50 உயர்த்தப்பட்டுள்ளது. 

- 600 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது.

- 700 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.275 உயர்த்தப்பட்டுள்ளது.

- 800 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.395 உயர்த்தப்பட்டுள்ளது.

- 900 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.565 உயர்த்தப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் 500 யூனிட் வரை ₹297.50 உயர்த்தப்பட்டுள்ளது ஆனால் அதுவே 600 யூனிட் என்றால் ₹155 மட்டுமே உயர்த்தப் படுகிறது. அதாவது முந்தைய தொகையின் சதவிகித அடிப்படையில் கட்டண உயர்வு தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் யூனிட் அளவு அதிகரிக்க அதிகரிக்க, கட்டண உயர்வு சதவிகித விகிதாச்சாரம் குறைந்து கொண்டே வரும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அந்த விகிதாச்சாரம் 

100 unit - மாற்றமில்லை

200 unit - ₹ 27.50 (26.73%)

300 unit - ₹ 72.50 (15.30%)

400 unit - ₹ 147.50 (7.94%)

500 unit - ₹ 297.50 (4.46%)

600 unit - ₹ 155.00 (1.32%)

700 unit - ₹ 275 (0.83%)

800 unit - ₹ 395 (0.53%)

900 unit - ₹ 565 (0.35%) என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. 

#TNEB #Elelectricity 

Post a Comment

0 Comments