முட்டாள்தனம் தான் அவர்களின் மூலதனம் - கள்ளக்குறிச்சி சம்பவம்

முட்டாள்தனம் தான் அவர்களின் மூலதனம் - கள்ளக்குறிச்சி சம்பவம்


இவர்கள் யார் என்று தெரிகிறதா ??
நேற்று நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் கூட்டம்.இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் 128 பேர் இன்று இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அடுத்த 15 நாட்களுக்கு சிறையில் இருக்கப்போகிறார்கள்.இதில் 18 சிறார்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மேல் எத்தனை வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா ?
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (IPC Section 147) -- கலவரம் செய்ததற்கான தண்டனை
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 148 (IPC Section 148) -- பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்ததற்கான தண்டனை
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294B (IPC Section 294B ) -- பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில ஆபாச செயலைப்புரிதல்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323(IPC Section 323) -- தன்னிச்சையாக வேண்டுமென்றே காயப்படுத்தும் செயலை செய்தல்
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324(IPC Section 324) -- ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துவது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 332(IPC Section 324) -- அரசாங்கத்தில் வேலைபார்ப்பவர்களை கடமையை செய்ய தடுப்பது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 II (IPC Section 506 II) ,இப்படி மொத்தம் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தனை பிரிவுகளில் பதியப்பட்ட வழக்குகளிலிருந்து வெளியே வரவே குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகும்.அதுவும் பணபலம் இருந்தால்...
போலீஸ் விசாரணை,கோர்ட் hearings என அடுத்த பலவருடங்கள் இவர்களுக்கு நரகமே.இவர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் நரக வாழ்க்கை.
வழக்கில் இருந்து வெளியே வந்தாலும்,
பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல் ,அந்நிய நாட்டில் வேலை கிடைக்காமல் போவது,இந்தியாவில் வேலை என்றாலும் Background செக்கிங்கில் மாட்டுக்கொள்வார்கள்.வாழ்க்கை எல்லாப்புறமும் இவர்களை நசுக்கும்.
நான்கு மணி நேர போராட்டத்தால் இவர்களின் வாழ்க்கையே பிளாக் மார்க் ஆகிவிட்டது.
இவர்கள் இப்படி செய்ய தூண்டிவிட்ட,
வாட்ஸாப் அட்மின்கள்,சில அரசியல் கட்சி பிரமுகர்கள்,யூடுப் போராளிகள்,மீம்ஸ் பேஜ் அட்மின்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருப்பார்கள்.அடுத்து ஏதாவது போராட்டம் வந்தால் இது போன்ற இளைஞர்களை உசுப்பி விட்டு அவர்கள் கல்லா கட்டுவார்கள்.
நடிகர்களுக்கு எப்போது குரல் குடுக்க வேண்டும் எப்போது அமைதி காக்க வேண்டும் என்று நன்கு தெரியும்.
இதில் மாட்டிக்கொண்டு பலிக்கடா ஆகுபவர்கள் இளைஞர்களே !!!
இவர்களின் முட்டாள்தனம் தான் அவர்களின் மூலதனம்.

Post a Comment

0 Comments