கல்வி வளர்ச்சியில் காமராசர்

விருதுப்பட்டி நாயகனே 
சிவகாமியின் புதல்வனே 
படிக்காத மேதாவியே 
மதிய உணவு அளித்த வள்ளலே

பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடமே 
உம்முடையே ஆட்சிக்காலத்தில் 
வறுமை நீங்க உணவளித்து 
அறிவு வளர பள்ளிக்கூடம் பல திறந்து
வேறுபாடு களைய சீருடை தந்து 
திட்டங்கள் நிறைவேற சுந்தர வடிவேலு 
                                                 துணை புரிந்தார் 

தொழிற்கல்வி ஊக்குவித்து 
குடும்ப பசி ஆற்றினார் கர்மவீரர் 
தமிழ்நாடு முன்னேற திட்டம் பல தீட்டினார். 

"தென்னாட்டு காந்தியே"
எளிமையின் உருவமே 
பசியாற்றிய அன்னையே 
கிராமத்து விடியலே.

இலவச கல்வி, உணவு, சீருடை 
30 ஆயிரம் பள்ளி உருவாக்கிய வேந்தரே 
பல  தொழில்கள் உருவாக்கி 
கல்வி என்னும் விதையை மண்ணில் விதைத்து 
படிக்காத மேதையாக வலம் வந்தீர் கர்மவீரர் காமராசர். 


-     ஸ்ரீவித்யா 

Post a Comment

0 Comments