எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!! - வாழ்வியல் சிந்தனை

 


எங்கே மனம் பயமின்றி இருக்கிறதோ!!!

எங்கே பெருமிதத்துடனும் உறுதியுடனும் தலை நிமிர்ந்து நிற்கிறதோ!!!

எங்கே அறிவு சுதந்திரமாக செயல்படுகிறதோ!!!

எங்கே பூமி குறுகிய கோடுகளால் துண்டாடப்படாமல் இருக்கிறதோ!!!

எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து வார்த்தைகள் வெளிவருகின்றதோ!!!

எங்கே அயர்வில்லாத விடாமுயற்சி முழுமையான வெற்றியைஅடையமுடிகிறதோ!!!

எங்கே பகுத்தறிவுச் சிந்தனை மூடப்பழக்கத்தின் முன் மண்டியிடாமல் தன் பாதையில் பயணிக்கிறதோ!!!

எங்கே புதிய சிந்தனை புதிய செயல்கள் என்னும் விரிந்த பார்வைக்குள் மனம் உன்னால் செலுத்தப்படுகிறதோ!!!

இறைவா!!! அங்கே அந்த சுதந்திர உலகில் என் நாடு விழிக்கட்டும்...

Post a Comment

0 Comments