கவலையை விட்டு விடு.. - வாழ்வியல் சிந்தனை



கண்ணீர்  சிந்தும் போது துடைக்க 

யாரும் வருவதில்லை.


கவலை கொள்ளும் போது

சிரிக்க வைக்க எவரும் வருவதில்லை..


அறியாமல் ஒரு தவறு  செய்து பார்..

உன்னை விமர்சிக்க இந்த உலகமே கூடி வரும்..!


நம்மை பற்றி கவலை படாதவர்களுக்கு

நாம் சிந்தும் கண்ணீர் அர்த்தமற்றது..!


உன்னை  வெறுப்பவர்களை

நினைத்து கவலை கொள்ளாதே..


அவர்களுக்கு உன் அன்பை பெற 

தகுதி இல்லை என நினைத்துக்கொள்..!


கவலைகளின் அளவுகையளவாக இருக்கும் வரை தான் 

கண்ணீருக்கும் வேலை..


கவலைமலையளவு ஆகும் போது

மனமும் மரத்துப் போகும்..!


கடலளவு கண்ணீரை வடித்தாலும்…

நம் மனம் விரும்பாமல் எந்த கவலைகளையும்

சரி செய்ய முடியாது..!


கவலையை மறைக்க அழுதேன்..

அழுகையை மறைக்க மௌனமானேன்..


மௌனத்தைமறைக்க தனிமையானேன்..!

தனிமை தீரா வலியை ரணமாக்கிச் சென்றது..!


ஒரு வினாடியில் செய்த தவறு

வாழ்நாள் முழுவதும் கவலை தருகிறது..!


கவலையை விடு என்பதிலேயே

கவலை கொள்கிறாய்.


கவலையை விட்டு விடு..

மகிழ்வு உன்னைப் பற்றிக் கொள்ளும்.


Post a Comment

0 Comments