ரியல் எஸ்டேட் MLM மோசடி - அவசியம் தெரிந்து கொள்ளவேண்டியவைகள்

        என் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இரண்டு அரசாங்க வாத்தியார்கள். ஒருநாள் அதில் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். சில பல பொது விஷயங்கள் பேசியவர். மெல்ல ரியல் எஸ்டேட் பிஸினஸ் காஞ்சிபுரத்தில் என் நண்பர் ஒருவர் சிறப்பாக செய்கிறார்கள் என்றார்

    அப்புறம் நீங்கள் ஒரு தடவை ஒரு லட்சம் ரூபாய் போட்டால் போதும். அதற்கு ஈடாக ஒரு லட்சம் மதிப்புள்ள நிலத்தை உங்களுக்கு ரிஜிஸ்டர் பண்ணி தருவாங்க. அதுமட்டுமின்றி மாதா மாதம் ஒரு வருட காலத்திற்கு 15,000 ரூபாய் உங்களுக்கு வரும். 

    எப்போ உங்கள் முதலீடு பணம் உங்கள் கைக்கு வருதோ அதாவது (100,000/15,000=6.6) 6 மாதங்கள். 7 வாது மாதம் உங்களுக்கு அவங்க ரிஜிஸ்டர் பண்ணி கொடுத்த நிலத்தை, நீங்கள் அவர்களுக்கு திரும்ப ரிஜிஸ்டர் பண்ணி தரனும். 12 மாதங்களில் 6 மாதத்தில் உங்கள் அசல் பணம் உங்கள் கைக்கு வந்து விடும் மீதம் உள்ள 6 மாதம் ( 12-6=6) உங்களுக்கு தொடர்ந்து மாதம் 15,000 வரும். ( 15,000×12=1,80,000) . 

    அதாவது நீங்கள் போட்டது ஒரு லட்சம். 12 மாதங்களில் உங்களுக்கு கிடைப்பது 180000. ஆக 80,000 உங்களுக்கு லாபம் என்றார். அதுமட்டுமின்றி அவருக்கு கீழ் சில பேரை சேர்த்தாலும் அதுக்கும் referral commission வரும் என்றார்.

அதுல 3 package இருக்கு என்றார். 
1. ஒரு லட்சம் ( மாதம் 15,000) 
2. 3 லட்சம் ( மாதம் 45,000)
3. 5 லட்சம் (மாதம் 75,000) 

    உங்கள் முதலீட்டின் அடிப்படையில் உங்களுக்கு நிலம் ரிஜிஸ்டர் செய்யப்படும். மேலும் 5 லட்சம் போடுபவர்களுக்கு ஒரு கிராம் தங்கம் & SBI security உண்டாம். எனக்கு விருப்பம் இல்லை என்று சட்டென்று சொல்ல மனம் இல்லை. ஒரு தயக்கம் ஏனென்றால் பக்கத்து வீட்டுக்காரர் என்று ஒரு 3 மாதங்கள் பார்க்காமல் சார் என்று  ஓட்டி விட்டேன். அப்புறம் ஒரு நாள் அவர் என்னை விடவில்லை. அந்த ரியல் எஸ்டேட் தொழில் பண்ணும் ஓனர் வந்திருப்பதாக கூறி
    என்னை ஒரு ஹோட்டல்க்கு கூப்பிட்டு போனார். அங்கே ஒரு ரூமில் iPhone. iPad. Bed க்கு மேல பாதம், முந்திரி, மிக்சர் ஏகப்பட்ட Snacks. சாப்பிட்டு இருந்த ஒருத்தரை அறிமுகப்படுத்தி என்னை உட்கார வைத்தனர். அப்புறம் அவர் பக்கத்தில் ஒரு பெண்மணி. அவருக்கு PA (Personal Assistant) அவங்களை மேடம் என்று சொல்வார்களாம். 

    சிறிதுநேரம் கழித்து ஒரு 5 குடும்பம் வந்தனர். அனைவரும் அரசாங்க ஊழியர்கள். அப்புறம் வழக்கம் போல தடபுடலான விருந்து. மெதுவாக அந்த மேடம் பேச ஆரம்பித்தார். இவ்வளவு போடுங்க. எங்கள் லாபத்தை பிரித்து தருகிறோம் அப்படி இப்படி என்று. எதவாது கேள்வி இருந்தால் கேளுங்கள் என்றார். 

நான் ஒரு சில கேள்விகள் கேட்டேன். 

1. Public கிட்ட இருந்து பணம் திரட்ட அரசாங்க ஒப்புதல் வேண்டும். அதற்கான license இருக்கா. 2. உங்கள் ROI ( Return on Investment) plan என்ன?. 
3. எந்த எந்த ஊரில் நிலம் வாங்குறிங்க அந்த நிலத்தோட FMB copy வேணும்
4. எங்களிடம் வாங்கிய பணத்தை எந்த எந்த வழிகளில் முதலீடு பண்ண போறிங்க. 
    
    இப்படி என்று சில கேள்விகள் கேட்டேன். எதுக்கும் இல்லை என்று பதில் இல்லை. அதை சமாளிக்க எல்லாரும் சம்பாதிக்கனும் என்ற நோக்கத்தில் அவர் பேசினாரே தவிர legal compliance பற்றி தெளிவான தகவல்கள் இல்லை

     அப்புறம் அவங்க பணம் மாத மாதம் கையில் தான் தாருவாங்களாம். முடிந்த வரை அரசாங்க வேலையில் இருப்பவர்கள் தான் அவங்க டார்கெட்.  மாதம் முதல் ஞாயிறு பணம் கொடுக்க எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டுக்கு காரில் அந்த மேடமும். அந்த சாரும் வருவாங்க. அதில் பணம் போட்ட அனைவரும்.

    மாத பணம் வாங்க வருவாங்க . இப்படி மாத மாதம் கார் வரும். ஒரு 2 வருடம் தொடர்ந்து கார் வரும். பணம் வழங்குதல் நடந்தது. திடீரென ஒருநாள் பணம் போட்டவர்கள் மாத மாதம் பணம் வரவில்லை என்று ஆசிரியர் வீட்டிற்கு வந்து சத்தம் போட்டனர்.

   பக்கத்து வீட்டில் நடப்பதை எட்டி பார்ப்பதும். கேட்பதும் நாகரிகம் அல்ல ஆகையால் அதை கண்டு கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். அந்த ஒரு நாளுக்கு அப்புறம் அந்த காரும் வரவில்லை. அந்த ஆசிரியரும் யாரிடமும் பேசவில்லை. என்ன ஆயிற்று என்ற தகவலும் இல்லை. எப்படி கேட்பது? அது அவருக்கும் சங்கடம்

    நாகரீகம் கருதி விட்டு விட்டேன். அவர் தற்சமயம் அனைவரிடமும் வழக்கம் போல பேசுகிறார் ஆனால் ரியல் எஸ்டேட் தொழில் பற்றி பேசுவதில்லை. பணம் போட்டவர்கள் நிலை? என்னவென்றும் தெரியவில்லை. தயவுசெய்து பணம் போட்டால் இரட்டிப்பு ஆகும் என்று நம்பி பணத்தை போடாதீர்கள் 🙏.

    சிறந்த பாதுகாப்பான முதலீடுகள் பற்றி தகவல்கள் தர சில நல் உள்ளங்களும் உள்ளனர். நமக்கு வழிகாட்டிகளாகவும் உள்ளனர். அவர்களிடம் ஆலோசனை கேட்டு உங்கள் உழைப்பை சரியான முறையில் investment பண்ணவும். 
    

Post a Comment

0 Comments